மந்தனாவின் ராசி – RCB யின் 16 ஆண்டுகள் கனவு நனவானது..!

ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2024ஐ வென்றது.

டெல்லியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆட்டத்தின் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் அணி 18.3 ஓவரில் 113  மட்டுமே எடுக்க முடிந்தது.

பதில் இன்னிங்ஸை விளையாடிய பெங்களூரு மகளிர் அணி, இன்னிங்ஸ் முடிவடைய 3 பந்துகள் மீதமிருக்க 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
எலிஸ் பெர்ரி ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும், சோபியா டெவின் 32 ஓட்டங்களையும், ஸ்மிருதி மந்தனா 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

முதலில் பேட் செய்த டெல்லி அணியின் தொடக்க விக்கெட்டுக்கு கேப்டன் மேக் லெனின் மற்றும் ஷபாலி வர்மா ஜோடி 7.1 ஓவரில் 64 சேர்த்திருந்தாலும்  பெங்களூரு பந்துவீச்சாளர்கள் தங்கள் மொத்த எண்ணிக்கையை 113 கட்டுப்படுத்த முடிந்தது.

முதல் விக்கெட்டை கைப்பற்றிய சோஃபி மொலினக்ஸ் அதே ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது போட்டியின் முடிவை பெரிதும் பாதித்தது. அவர் 4 ஓவர்களில் 20 க்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பெங்களூரு அணி சார்பில் வர்மா 44 , லெனின் 23 ல் ஆட்டமிழக்க, ஸ்ரேயங்கா பாட்டீல் 3.3 ஓவரில் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுவரை நடைபெற்ற 16 ஐபிஎல் தொடர் போட்டிகளிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆடவர் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை என்ற ஏக்கத்தை மகளிர் படை ஈடுகட்டியிருக்கிறது.