மந்திர சுழல் பந்தாளர் கெவின் கொத்திகொட T10 தொடரிலிருந்து விலகல்.

இலங்கையின் 22 வயதான சுழல் பந்து வீச்சாளர் கெவின் கொத்திகொட அபுதாபியில் இடம்பெற்றுவரும் T10 தொடரிலிருந்து கணுக்கால் உபாதை காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் இடம்பெற்றுவரும் T10 தொடரில், முஷடாக் ஹுசைன் தலைமையிலான மரதா அரேபியன்ஸ் அணி சார்பில் கெவின் கொத்திகொட விளையாடியிருந்தார்.
22 வயதான இலங்கையின் கெவின் கொத்திகொட, ஒரு வித்தியாசமான சுழல் பந்துவீச்சு முறையை வெளிப்படுத்துபவர் என்பதுடன் நேற்றைய கூவலாண்டேர்ஸ் அணியுடனான T10 போட்டியில் ஒரு ஓவர் பந்துவீசி 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.