‘மன்கட்’ முறைமூலம்்இறுதி விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றிப் போராட்டத்தை தடுத்த இந்தியா..!

லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலன் கோஸ்வாமியின் கடைசி சர்வதேச போட்டியில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

170 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 103 ரன்களுக்குச் சரிந்தது.

இருப்பினும், கேப்டன் எமி ஜோன்ஸ் மற்றும் சார்லி டீன் ஆகியோர் இந்திய பந்துவீச்சாளர்களை ஏமாற்றினர்.

வெற்றிக்கு 17 ரன்கள் தேவையான நிலையில் டீன், தீப்தி ஷர்மாவால் 47 ரன்கள் பெற்றிருந்தபோது ‘மன்கட்’ முறைமூலமாக ஆட்டமிழப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிமூலமாக இந்திய மகளிர் அணி இங்கிலாந்தை அவர்கள் மண்ணிலேயே வைத்து 3-0 என வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.