மறக்க முடியாத நாள் – அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து மொயின் அலி கருத்து…!

மறக்க முடியாத நாள் – அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து மொயின் அலி கருத்து…!

தனது கிரிக்கெட் வாழ்கையில் மறக்க முடியாத சம்பவத்திற்கு தமிழ் சினிமா நடிகர் அஜித்குமார் ஒரு காரணமாக இருந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மொயின் அலி கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்து வருபவர் மொயின் அலி. இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருபவர் அண்மையில் டெஸ்ட் போட்டிகளுக்கு விடைகொடுப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த சூழலில்தான் நேற்று அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
தனது கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத 2 தருணங்களை மொயின் அலி பகிர்ந்துக்கொண்டார். அது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியா – இங்கிலாந்து அணிகள் சென்னையில் ஒரு முறை டெஸ்ட் போட்டியில் மோதியபோது நான் பவுண்டரி லைனுக்கு அருகே நின்றுக்கொண்டிருந்தேன்,என்னை அழைத்த ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் எப்போது எனக்கேட்டார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன்பிறகு தான் அஜித் குறித்து தெரியவந்தது என்றும் இந்த நிகழ்வு மறக்கவே முடியாதது எனவும் கூறியுள்ளார்.

மொயின் அலி கூறிய இந்த சம்பவம் இணையத்தில் படு வைரல் ஆகியிருந்தது. மொயின் அலி என்னிடம் வந்து வலிமை என்றால் என்ன எது குறித்து கேட்கிறார்கள் என வினவினார் என இந்திய வீரர் அஷ்வினிடம் கேட்டதாகவும், அதற்கு விளக்கம் கொடுத்தேன் என தெரிவித்திருந்தார். இது தற்போது அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அஜித் ரசிகர்கள் மொயின் அலியையும் விட்டு வைக்கவில்லை என்பதே இங்கே முக்கியமானது.