மலிங்காவின் சாதனையை முறியடிக்க தயாராகும் ஷகிப் அல் ஹசன்- நேற்றைய போட்டியில் புதிய உலக சாதனை…!

மலிங்காவின் சாதனையை முறியடிக்க தயாராகும் ஷகிப் அல் ஹசன்- நேற்றைய போட்டியில் புதிய உலக சாதனை…!

பங்களாதேஷ் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் வங்கதேச அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று நிறைவுக்கு வந்தது.

இந்த தொடரில் 4-1 எனும் அடிப்படையில் பங்களாதேஷ் அணி அபாரமான முறையில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியில் நேற்றைய நாளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷகிப் அல் ஹசன் புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்்.

சர்வதேச 20-20 கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் ஆயிரம் ஒட்டகங்களையும் நூறு விக்கெட்களையும் கைப்பற்றிய ஒரே வீரர் என்ற பெருமையை ஷகிப் அல் ஹசன் பெற்றமை கவனிக்கத்தக்கது..

இது மாத்திரமல்லாமல் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரராக லசித் மாலிங்க காணப்படுகிறார், 107 விக்கட்களுடன் முதலிடத்தில் காணப்படும் நிலையில், இப்போது ஷகிப் அல் ஹசன் கைப்பற்றிய விக்கட்டுக்களின் எண்ணிக்கை102 ஆக உயர்வடைந்துள்ளது.

விரைவில் மாலிங்கவின் உலக சாதனையை முறியடிப்பார் என நம்பப்படுகிறது, மாலிங்க அண்மைக்காலமாக போட்டிகளில் விளையாடி வராத நிலையில், இந்தப் பட்டியலில் ஷகிப் அல் ஹசன்  சாதனையை நிலை நாட்ட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.