மஹிந்தவின் வாரிசு ரோஹித ராஜபக்ச கிரிக்கட்டில் அறிமுகம், மேத்யூஸ் அசத்தல்..!

மஹிந்தவின் வாரிசு ரோஹித ராஜபக்ச கிரிக்கட்டில் அறிமுகம், மேத்யூஸ் அசத்தல்..!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச இன்று களுத்துறை CC அணிக்காக மேஜர் கிளப் லிமிடெட் ஓவர் போட்டியில் விளையாடி தனது உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ரோஹித ராஜபக்ச (32) தனது உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் நேவி எஸ்சி யில் இருந்து அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கோல்டன் டக் மூலமாக ஆட்டமிழந்தார்.

இலங்கை கிரிக்கெட் (SLC) அணிக்கு தகுதி பெறுவதற்காக தான் கிரிக்கெட் விளையாடுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ரோஹித ராஜபக்ச கடந்த வாரம் மறுத்தார்.

இலங்கை கிரிக்கெட் தேசிய அணியில் நுழைவதற்கு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது அவசியம்.

இதற்கிடையில், இலங்கையின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் விளையாட்டில் எடுத்துக்கொண்ட சிறிய ஓய்வுக்கு பிறகு இன்று கிரிக்கெட் களத்துக்கு திரும்பினார்.

காலி சிசிக்கு எதிராக மேத்யூஸ் 45 ரன்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.