மஹிந்த கைது செய்யப்படவேண்டும்- சுமந்திரன்..!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மகிந்த ராஜபக்ச எடுத்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நேற்று அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என்றார்.

தாக்குதல் நடத்தியவர்களை ஏற்பாடு செய்து நேற்று கொழும்புக்கு அழைத்து வந்த மகிந்த ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவாளர்கள், அலரி மாளிகைக்கு வெளியேயும், கொழும்பு காலி முகத்திடலில் நேற்றும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் நேற்று காலை அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.