மஹேலவின் தலைமை பயிற்சியாளர் பதவி யாருக்கு -வெளிவரும் தகவல்…!

தென்்ஆபிரிக்காவில் ஆரம்பமாகவுள்ள SA20 அணியில் MI கேப் டவுனில் பயிற்சியாளராக இணைவதாக அறிவிக்கப்பட்ட மார்க் பவுச்சர், மும்பை இந்தியன்ஸில் மஹேல ஜெயவர்த்தனவின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்கும் சந்தர்பம் உருவாகியுள்ளது.

MI கேப் டவுனின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் சைமன் கட்டிச் நியமிக்கப்பட்டதை அடுத்து இந்த செய்தி வந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை ஐபிஎல் வெற்றியாளர்களான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மஹேல ஜெயவர்த்தன, MI குழுமத்தின் மூன்று உரிமையாளர்களின் பயிற்சி ஊழியர்களை மேற்பார்வையிடும், உலகளாவிய செயல்திறன் தலைவராக (Global Head of performance) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Cricinfo இன் சமீபத்திய அறிக்கைகளின்படி, முன்னாள் இலங்கை சர்வதேச வீரர் மூன்று அணிகளிலும் பயிற்சியாளர்களை இறுதி செய்துள்ளார் எனவும் அவை இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் மஹேல ஜெயவர்த்தனவின் வெற்றிடமான தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மார்க் பவுச்சரது பெயர் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

எமது YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள் ?