மஹேலவின் மாயாஜால மூளையைப் பாருங்கள்–ஆச்சரியம் ஆனால் உண்மை…!

இந்தாண்டுக்கான IPL ஏலம் சென்னையில் நேற்றைய நாளில் நிறைவுக்கு வந்துள்ளது, பலவித ஆச்சரியங்கள் நிகழ்ந்துள்ள இந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் தங்கள் பணத்தையும் மூளையையும் எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை புரியவைக்கப்போகிறேன்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிக மூளையுள்ள, புத்திசாலியான தலைவர் மஹேல ஜெயவர்த்தன என அறியப்பட்டுள்ள நிலையில், அவர் மூளைசாலியான பயிற்றுவிப்பாளர் என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்.

மேக்ஸ்வெல் போன்ற வீரர்களுக்கு 14 கோடிக்கு அதிக செலவு செய்வதில் கடந்த கால மோசமான முடிவுகளை மும்பை இந்தியன்ஸ் மட்டுமே கற்றுக் கொண்டது. 2013 ல் மும்பை இந்தியன்ஸ் அணி, மேக்ஸ்வெல்லை 1 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து பெற்றுக்கொண்டது.

பின்னர் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் அதே விலைக்கு ஒரு வருடம் கழித்து மும்பை இந்தியான்ஸ் அணியால் 2014 ல் வாங்கப்பட்டார்.

இப்படி வீரர்களுக்கு பெருந்தொகையைக் கொடுத்து செலவு செய்வது பிரயோசனமற்றது என்பதை மும்பை இந்தியன்ஸ் அணி கற்றுக்கொண்டது, அதன்பின்னர் மும்பை இந்தியன்ஸ் பெரும்தொகைப் பணத்தை ஒருவருக்காக செலவு செய்வதை தவிர்த்தே வந்தது.

நேற்றைய ஏலத்தில் நடந்ததை பாருங்கள், அவர்களுக்கு கடந்த ஆண்டில் கிண்ணம் வெல்ல காரணமாகவிருந்த ஒரு வேகப்பந்து வீச்சாளர் கூல்டெர்னைலை 8 கோடி வைத்திருக்க விரும்பாமல், அவரை வெளியேற்றிவிட்டு நேற்று ஏலத்தில் 5 கோடிக்கு லாபத்தில் திருப்பி வாங்கியது.

மீதமான 3 கோடியை வைத்து அனுபவமிக்க ஸ்பின்னரையும் ஒரு நல்ல ஆல்ரவுண்டரையும் வாங்கினர். சுழல் பந்து வீச்சாளர் சாவ்லா 2.5 கோடிக்கும் , நியூசிலாந்தின் சகலதுறை வீரர் நீஷாம் 50 லட்சத்துக்கும் வாங்கப்பட்டுள்ளனர்.

மும்பை அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி மிகப்பெரிய வியாபாரி என்பதையும், மஹேல மிகப்பெரிய புத்திசாலி என்பதையும் நேற்றைய ஏலம் நமக்கு எடுத்தியம்பியுள்ளது.

பக்கா பிளான்ப்பா <3

T.Tharaneetharan