மஹேலவின் Southern Brave அணி சம்பியன்- கிரிக்கெட் அகராதியில் புதிய வரலாறு படைத்தது The Hundred..!
இங்கிலாந்தில் இடம்பெற்ற புது வகையான கிரிக்கெட் தொடராக ரசிகர்களால் பார்க்கப்பட்ட ‘The Hundred’ என அழைக்கப்படும் 100 பந்துகளுக்கான கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.
நேற்று லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் மஹேல ஜெயவர்தன பயிற்சியாளராக கொண்ட Southern Brave அணி அற்புதமான வரலாற்று வெற்றியை பதிவு செய்து, The Hundred தொடரின் முதலாவது வெற்றியாளர்களாக முடிசூடிக் கொண்டது.
மாபெரும் இறுதிப் போட்டியில் மஹேல ஜெயவர்த்தன பயிற்றுவிக்கும், ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான Southern Brave அணியும், மொயின் அலி தலைமையிலான Birmingham Phoenix அணியும் விளையாடின.
100 பந்துகளை எதிர்கொண்டு Southern Brave மிகச் சிறப்பாக 5 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது ,இதில் போல் ஸ்டேர்லிங் 31 பந்துகளில் அரைச்சதம் அடித்து அசத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதி 65 பந்துகளில் Southern Brave அணி 135 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமையே அவர்கள் 168 எனும் இலக்கை அடைவதற்கு காரணமாக அமைந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Birmingham Phoenix அணி 136/5 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது, லிவிங்ஸ்டன் அதிரடி காட்டினாலும் அந்த அணியால் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியாது போயுள்ளது.
துணிச்சலாக கிரேக் ஓவர்டன் மற்றும் ஜார்ஜ் கார்டன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் பீனிக்ஸை முதல் 20 பந்துகளில் 14-2 ஆகக் கட்டுப்படுத்தினர் –
லிவிங்ஸ்டன் (19 பந்து 46 ரன்கள்) பின்னர் பீனிக்ஸுக்கு நம்பிக்கை கொடுத்து மிரட்டினாலும் வெற்றிக்குக் போதுமானதாக அமையவில்லை.
ஃபீனிக்ஸ் அணிக்கு இறுதியில் 20 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோர்டான் , டைமல் மில்ஸ் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் ஓட்டங்களை வலுவாக கட்டுப்படுத்தி வெறுமனே 21 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்தனர்.
துடுப்பாட்டத்தில் கேப்டன் மொயீன் அலி (36 ), கிறிஸ் பெஞ்சமின் (23) மற்றும் பென்னி ஹோவெல் (20 ) தங்களின் சிறந்த துடுப்பாட்ட பங்களிப்பை நல்கினர்.
How do you describe THIS? ?
Simply stunning from Tim David! ? #TheHundred pic.twitter.com/kGg19ertff
— The Hundred (@thehundred) August 21, 2021
பீனிக்ஸின் தோல்விக்கு குறிப்பாக நியூசிலாந்தின் ஆடம் மில் காரணமாக இருந்தார், அவர் 20 பந்துகளில் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றி மிரட்டினார். அதிலும் அவர் 25 பந்துகளில் பவர்பிளேயில் தான் வீசிய 15 பந்துகளில் மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தமையும் முக்கியமானது.
இறுதியில் The Hundred தொடரின் முதல் வெற்றியாளர்களாக சவுத்தேர்ன் பிரேவ் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியாளராக அறிமுகமான மஹேல ஜெயவர்தன முதல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிண்ணத்தை வென்று கொடுத்ததைப் போன்று, The Hundred தொடரிலும் முதல் தொடரிலேயே Southern Brave அணிக்கு கிண்ணம் வென்று கொடுத்து ஒரு வெற்றிகரமான பயிற்சியாளர் தான் என்பதை ரசிகர்களுக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
மஹேல ஜெயவர்தன விற்கும் அணியினருக்கும் வாழ்த்துக்கள்.