மஹேலவோடு இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்கிறார் குசல் மென்டிஸ்..!

புதிய பயணத்தை ஆரம்பிக்கிறார் குசல் மென்டிஸ்..!

குசல் மெண்டிஸ் எதிர்வரும் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் பருவத்தில் சிங்கள விளையாட்டுக் கழகத்தை (SSC) பிரதிநிதித்துவப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டபோது டேர்ஹாமில் உள்ள உயிர் பாதுகாப்பு குமிழியை ஜூன் மாதத்தில் மீறியதற்காக கிரிக்கெட்டில் இருந்து குசல் மென்டிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மென்டிஸ், SSC க்கு செல்வதற்கு முன்பு CCC கழகத்தின் உறுப்பினராக இருந்தார். SSC கழகத்தின் தற்போது திலின கண்டம்பி பயிற்சியாளராக உள்ளார், மஹேல ஜெயவர்த்தனே அதன் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெண்டிஸ், தனுஷ்க குணதிலக மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒரு வருட தடையும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஆறு மாத தடையும் பெற்றனர்.

இருந்த போதிலும், நவம்பர் மாதம் தொடங்கும் உள்நாட்டு போட்டியில் பங்கேற்க மூன்று வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவு குறித்து குசல் மென்டிஸ் டுவிட்டரில் கருத்து பகிர்ந்துள்ளார்.