மஹேல ஜெயவர்த்தன Mahela Jayawardena
“மஹேலவ ஏன் பிடிக்கும் எதுக்குப்பிடிக்கும்?” என்று யாரும் கேட்பவர்களுக்கு, “மஹேலவால தான் எனக்கு கிரிக்கெட்டே பிடிச்சுது”
என்பது தான் என்னுடைய பதில். அந்தளவுக்கு கிரிக்கெட்ட விரும்ப வைத்தவன் மஹேல. வைத்தவன் என்று மரியாதை இல்லாமல் ஒருமையில சொல்றனே என்று கூட நீங்கள் கேக்கலாம். உரிமையுள்ளவர்களை, நண்பர்களை ஒருமையில் அழைப்பது தானே நம் வழக்கம். மஹேலவும் அப்படித்தான் எனக்கு.
மஹேலவின் விளையாட்டு எந்தளவுக்கு எனக்கு பிடிக்கும் என்றால் ” எப்படா இந்த முன்வரிசை ப்ளேயர்ஸ்லாம் அவுட் ஆவாங்க… எப்படா மஹேல பட்டோட கிரவுண்ட்டுக்குள்ள வருவான் ” என்று பார்த்துட்டு இருப்பன். சில சமயங்கள்ல மஹேல பட்டிங் பண்ணனும் எண்டதுக்காக மற்ற ப்ளேயர்ஸ் அவுட்டாகனும் என்று கடவுளை கும்பிட்டதும் அப்டி நடந்தா சந்தோசப்பட்டதும் கூட உண்டு.
மஹேலவின் பட்டிங்க் திறமை பற்றி உலகமே அறியும். சாதனைகளையும் சொல்லிக்காட்டத்தேவையில்லை. பட்ஸ்மனா மட்டுமில்லாம களத்தடுப்பாளராவும் சிறப்பாகவே செயற்பட்டிருப்பான். மஹேல காலத்துல “ஸ்லிப்” பொஷிஷன்ல ஃபீல்டிங் செய்ய மஹேலவ அடிச்சுக்கொள்ள ஆளே இல்ல எண்டது தான் என்னோட வாதம். அந்தளவுக்கு தரமா இருக்கும் மஹேலட ஃபீல்டிங். c Mahela Jayawardena b Muralitharan என்ற இந்த கொம்போ தான் அதுக்கு சான்று.
மஹேலட லேட்கட்ட ரசிக்காதவன் உண்மையிலேயே ரசனையில்லாதவன் எண்டு தான் சொல்லுவன். அந்தளவுக்கு லாவகமா பந்த லேட்கட் பண்ணி third man திசைல பவுண்ட்ரி அடிப்பான் மஹேல. அதுல ஒரு தனி ஸ்டைல் இருக்கும். அந்த ஸ்டைல், அந்த நேர்த்தில்லாம் வேற எந்த பட்ஸ்மன்லயும் மஹேலவுக்கு பிறகு நான் பாத்ததில்ல. அதுலயும் ஸ்லிப் ஃபீல்டர் நிக்கும் போது லேட்கட் பண்றதுலாம் வேற லெவல்.
ஒரு ஃபோர் அல்லது சிக்ஸ்க்கு அடிக்கும் போது, பந்த அடிச்சுட்டு ரன்ஸ் ஓடிட்டு இருக்கும் போது பந்து பவுண்டரி லைனை தாண்டினாலும் அப்டியே இடையில நிக்காம அந்த ரன்ன நிறைவு செஞ்சு க்றிஸ் பண்றதுல்லாம் மஹேலவோட தனி ஸ்டைல்.
என்ன தான் பெரிய ப்ளேயரா இருந்தாலும், தலைமைப்பதவி கிடைச்சதும் அந்த ப்ளேயர் கப்டன் ஆனதும் போட்டிகள்ல ஓட்டங்கள பெறுறது குறைவாகவே இருக்கும். அதுக்கு காரணம் கப்டன் எண்ட ஒரு அழுத்தம் அந்த ப்ளேயர் மேல இருக்கும். ஆனா மஹேல அந்த அழுத்தத்தயெல்லாம் ஒரு பொருட்டாவே கொள்ளாத மாதிரி வந்து ஸ்கோர் பண்ணிட்டு போவான்.
மஹேலவோட கப்டன்சில தான் இலங்கை கிரிக்கெட் அணி ஒட்டுமொத்தமா சிறந்த அணிய கொண்டிருந்திச்சு எண்டு சொல்லலாம். அதுக்கு உதாரணம் 2007 உலகக்கிண்ண அணி. என்ன தான் அதுக்குப்பிறகு திறமையான அணிகள் உருவாகி இருந்தாலும் அந்த அணிய போல ஒரு அணி இல்லை எண்டது தான் உண்மை. அதுக்கு காரணம் மஹேலவோட கப்டன்சிப்.
இலங்கை கிரிக்கெட்டுக்கும் கிரிக்கெட் ப்ளேயர்ஸ்க்கும் இடையில ஏகப்பட்ட முறுகல்கள் இருந்தபோதெல்லாம் ப்ளேயர்ஸ் பக்கம் ஆதரவா நிண்ட கப்டன் மஹேல என்பது மறுக்க முடியாத உண்மை.
மனுசன் சர்வதேச போட்டிகள்ல இருந்து ஓய்வுபெற்றதும் எங்க இனிமே மஹேலவ கிரவுண்ட்ல பாக்கமுடியாதோ என்று வருத்தப்பட்டபோது அவன் எடுத்த புது அவதாரம் தான் பயிற்றுவிப்பாளர் அவதாரம். 2015ல இங்கிலாந்து அணிக்கு பட்டிங் கோச்சா நியமிக்கப்பட்டான். பிறகு 2017ல மும்பை இந்தியன்ஸ் அணியில தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவி.
பயிற்றுவிப்பாளரா பொறுப்பெடுத்த முதல் சீசன்லயே சம்பியன் ஆச்சுது மும்பை இந்தியன்ஸ். பிறகு திரும்பவும் 2019ல சம்பியன்ஸ் ஆகிச்சு மும்பை இந்தியன்ஸ் அப்பவும் இந்த மனுசன்தான் ஹெட் கோச். அதுலயும் 2019 ஐ.பி.எல் இறுதிப்போட்டில இறுதி ஓவர் மலிங்க தான் போடனும் எண்டு எடுத்த முடிவே சொல்லும் மஹேலவோட கப்பாசிற்றி என்னவெண்டு. எங்கட பேச்சு வழக்குல சொல்லனும்னா ” மஹேல ஒரு மண்டைக்காய் “
இப்பவும் இலங்கை ரசிகர்கள் ஆசைப்படுற ஒரே விசயம் இலங்கை அணிக்கு ஹெட் கோச்சா மஹேல வரணும் எண்டது தான். அது நடக்க வாய்ப்புக்கள் மிகக்குறைவுதான், ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்தா உலகத்துல தலைசிறந்த அணியா இலங்கை அணி உருமாறும் எண்டதுல எந்த வித சந்தேகமுமே இல்ல.
சமீபத்தில் கூட ஹோமாகம கிரிக்கெட் கிரவுண்ட் கட்டுதல் தொடர்பான பிரச்சனையில், தன் கனவான் தன்மையையும் வெளிக்காட்டி இருக்கிறார்.
கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்பார்கள். ஆம் இவனும் அவர்களில் ஒருவனே.
சிறந்த பட்ஸ்மன், சிறந்த ஃபீல்டர்,
சிறந்த ப்ளேயர், சிறந்த கப்டன், சிறந்த கோச் எல்லாத்துக்கும் மேல சிறந்த மனிதன் மஹேல ஜெயவர்த்தனவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
#Sukirthan Sunthar