மஹேல மற்றும் அவிஷ்காவிடம் இருந்து இளையோருக்கு பயிற்சி.

மஹேல மற்றும் அவிஷ்காவிடம் இருந்து இளையோருக்கு பயிற்சி.

மார்ச் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ள 94வது Big match ஐ முன்னிட்டு ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரி அணிகள் சில சிறப்பு பயிற்சி அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

முதலாவது அமர்வை இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் அவிஷ்க குணவர்தன ஆகியோர் நடத்தினர்.

இதன்படி, ஆனந்த வித்தியாலயத்திற்கான விசேட பயிற்சியை நாலந்தாவின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தனவும், நாலந்த கல்லூரி அணிக்கான பயிற்சியை ஆனந்தாவின் முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தனவும் நடாத்தினர்.

#Bigmatch