மான்செஸ்டர் கழகத்துக்காக குருவும் சிஷ்யனும் இணைந்து கோல் அடித்த சுவாரஸ்ய சம்பவம் ..!
கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த பிரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் முக்கியமான போட்டி மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் New Castle அணிகளுக்கிடையில் நிறைவுக்கு வந்தது.
நேற்று சனிக்கிழமை இரவு நடந்த இந்த ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்தில் மீண்டும் இணைந்து விளையாடி இருந்தார்.
இந்த போட்டியில் முதல் இரண்டு கோல்களும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மூலம் பெறப்பட்டன, 3-வது கோலை பெர்னான்டஸ் பெற்றுக்கொள்ள, நான்காவது கோலை 28 வயதான இங்கிலாந்தின் ஜெஸ்ஸி லிங்கார்ட் பெற்றுக்கொண்டார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், 18 ஆண்டுகளுக்கு முன்னர் 18 வயதாக இருக்கும்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ, மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் அக்கடமியில் இளம் வீரர் ஒருவருக்கு கால்பந்து நுணுக்கங்களை கற்றுக் கொடுத்த படம் ஒன்று வெளியாகி இருக்கிறது ்
அந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் கால்பந்து நுணுக்கங்களை ரொனால்டோவிடமிருந்து கற்றுக்கொண்ட அந்த வீரர்தான் ஜெஸ்ஸி லிங்கார்ட்.
இன்று 36 வயதான ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கழகத்துக்கு மீண்டும் இணைந்தபோது, முதலாவது கோலைை ரொனால்டோவும் ,நான்காம் கோலை லிங்கார்ட்டும் பெற்றுக் கொண்டனர்்.
ஆக மொத்தத்தில் குருவும் ,சிஷ்யனும் இணைைந்து மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்கு 41 எனம் வெற்றியையும் பரிசளித்தனர்.