மாயங் யாதவ் ஒரு தங்கம்! அவரை வீணடிச்சிறாதீங்க! உடனே இந்த நாட்டுக்கு அனுப்புங்க.. தமிழக வீரர் கருத்து

மாயங் யாதவ் ஒரு தங்கம்! அவரை வீணடிச்சிறாதீங்க! உடனே இந்த நாட்டுக்கு அனுப்புங்க.. தமிழக வீரர் கருத்து

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு விலை மதிக்க முடியாத திறமையான வீரர் கிடைப்பார். கடந்த சீசனில் ரிங்கு சிங் இந்திய அணிக்கு கிடைத்தார். இந்த நிலையில் இந்தியாவில் திறமை வாய்ந்த பல பேட்ஸ்மேன்கள் கொட்டி கிடக்கிறார்கள்.

ஆனால் பேட்ஸ்மேன்களை மிரட்டும் வேகப்பந்துவீச்சாளர்களும், ஆல்ரவுண்டர்களும் கிடைப்பது அரிதாக இருக்கிறது. அப்படி வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைத்தாலும் இந்திய அணி அவர்களை சரியாக பயன்படுத்துவது இல்லை.

குறிப்பாக இரண்டு சீசனுக்கு முன்பு காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் என்ற வீரரை ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ கண்டெடுத்தது. ஆனால் அவருக்கு போதிய வாய்ப்பு வழங்காமல் தற்போது தடுமாறி வருகிறார். உம்ரான் மாலிக் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் வீரராக எப்படி திகழ்ந்தாரோ, தற்போது அவரையே மிஞ்சும் அளவுக்கு மாயங் யாதவ் என்ற 21 வயது தற்போது ஐபிஎல் தொடர் மூலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.

155 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துகளை வீசும் மாயங் யாதவ், 2 போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் அவர் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மேக்ஸ்வெல் கேமரன் கிரீன் போன்ற சர்வதேச வீரர்களை வீழ்த்தி இருக்கிறார். இதனால் மாயங் யாதவ், இந்தியாவுக்கு கிடைத்த விலை மதிப்பற்ற தங்கம் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர். இந்த நிலையில் மாயங் யாதவை, உம்ரான் மாலிக் போல் வீணடித்து விடக்கூடாது என்ற கோரிக்கையும் இருந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் டபிள்யூ வி ராமன், மாயங் யாதவை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் மாயங் யாதவை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று, அங்கு சில கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வையுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து சில டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைத்து அவருக்கு அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள டபிள்யூ ராமன், அதன்பிறகு மாயங் யாதவை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் முழுமையாக பயன்படுத்தி வெற்றியை காணுங்கள் என்றும் கூறியுள்ளார்.

மாயங் வைத்து இப்படி ஒரு சிறிய காலத் திட்டத்தை செய்யுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் மாயங் யாதவை, டி20 உலக கோப்பையில் பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில், டபுள்யூ ராமன் அவரை கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வையுங்கள் என்று கூறியிருப்பது கவனத்தைப் பெற்று இருக்கிறது.

 

 

Previous article#SLvBAN வெற்றியை நெருங்கும் இலங்கை..!
Next articleமீண்டும் Champions league கிரிக்கெட்டை ஆரம்பிக்க திட்டம்..!