மாலிங்கவை இங்கு நாம் ஏன் கொண்டாட வேண்டும் தெரியுமா ? இதுவரையான ஒட்டுமொத்த சாதனைகளின் விபரப் பட்டியல்…!

மார்ச் 2020 இல் கடைசியாக டி 20 போட்டியில் விளையாடிய லசித் மலிங்கா, நேற்று(14) அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

 2019 உலக கிண்ணப் போட்டிகளுக்குப் பின்னர் மலிங்கா பங்களாதேஷுக்கு எதிராக ஒரு பிரியாவிடை ஒருநாள் தொடரில் மட்டம் விளையாடினார்.

இருப்பினும், 2020 டி 20 உலக கோப்பையில் விளையாட அவர் ஆர்வம் காட்டினார், ஆனால் கோவிட் -19 காரணமாக கடந்த ஆண்டு போட்டிகள் இடம்பெறவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தேசத்திற்கு சேவை செய்த மலிங்காவின் சில ஆச்சரியமிகு புள்ளிவிவரங்களை திரட்டி விளையாட்டு.Com உங்களுக்கு தருகிறது,

1. டி 20 களில் லெஜண்ட்

தற்போது, ​​லசித் மலிங்கா சர்வதேச டி 20 மற்றும் ஐபிஎல் இரண்டிலும் முறையே 107 மற்றும் 170 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். மேலும், டி 20 போட்டிகளில் 2 ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் மாலிங்க . 2019 ல் நியூசிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியின் போது 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்:

லசித் மலிங்கா – 107
ஷாகிப் அல் ஹசன் – 106
டிம் சவுத்தி – 99

ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள்:

லசித் மலிங்கா – 170
அமித் மிஸ்ரா – 166
பியுஷ் சாவ்லா – 156

டி 20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்:

ரஷித் கான் Vs அயர்லாந்து , 2019
லசித் மலிங்கா Vs நியூசிலாந்து, 2019

2. ஒருநாள் உலகக் கோப்பையில் இரண்டு ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர்:

ஒருநாள் உலகக் கோப்பையில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர் லசித் மலிங்கா மட்டுமே. 2007 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கும், 2011 இல் கென்யாவுக்கும் எதிராக அந்த இரண்டு ஹாட்ரிக் சாதனைகள் வந்தன.

மேலும், ஒருநாள் போட்டிகளில் 3 ஹாட்ரிக் எடுத்த ஒரே பந்துவீச்சாளராகவும் அவர் இருக்கிறார். அவர் WC 2007 இல் SA க்கு எதிராக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3. WT20 2014 இல் கேப்டனாக கோப்பை வென்றார்:

2014 WT20 போட்டியின் பாதியிலேயே தினேஷ் சந்திமாலிடம் இருந்து லசித் மலிங்கா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.  2009 & 2012 இல் இரண்டு இறுதிப்போட்டி தோல்விகளுக்குப் பிறகு அவர் தனது அணியை முதல் WT20 பட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

4. ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 9 வது விக்கெட் இணைப்பாட்டம் புரிந்துள்ளார்:

2010 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 240 ரன்களை சேஸ் செய்த போது, ​​இலங்கை, ஒரு கட்டத்தில் 107/8 ஆக காணப்பட்டது, ஆனால் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் லசித் மலிங்கா 9 வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் கூட்டணியில் ஈடுபட்டு, வியக்கத்தக்க வகையில் போட்டியை இலங்கை வென்றது.

ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச 9 வது விக்கெட் கூட்டணி:

?ஏஞ்சலோ மேத்யூஸ் & லசித் மலிங்கா – 132 vs அவுஸ்திரேலியா, 2010

?கபில் தேவ் & சையத் கிர்மானி – 126* vs ஜிம்பாப்வே, 1983

?இர்பான் பதான் & ஜெய் பிரகாஷ் யாதவ் – 118 vs நியூசிலாந்து, 2005

5. ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டி 20 உலகக் கோப்பையில் முன்னணி விக்கெட் எடுத்தவர்:

லசித் மலிங்கா WC இல் 56 விக்கெட்டுகளையும், T20 WC யில் 38 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள்:

க்ளென் மெக்ராத் (1996-2007): 71
முத்தையா முரளிதரன் (1996-2011): 68
லசித் மலிங்கா (2007-2019): 56

T20 WC யில் அதிக விக்கெட்டுகள்:

ஷாஹித் அப்ரிடி (2007-2016): 39
லசித் மலிங்கா (2007-2014): 38
சயீத் அஜ்மல் (2009-2014): 3 6

 

6. ஒரு கேப்டனாக டி 20 -களில் சிறந்த பந்துவீச்சு நபராக இருக்கிறார்:

லசித் மலிங்கா 2019 இல் 5/6 Vs NZ இன் பந்துவீச்சு புள்ளிவிவரங்களை பதிவு செய்தார், அது T20 சர்வதேச ஆட்டங்களில் ஒரு கேப்டனுக்கு சிறந்ததாக உள்ளது. இந்த ஆட்டத்தில் மலிங்கா தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

7. ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சில் Bowled முறையில் மட்டும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தார்.

யார்க்கர்களை வீசுவதில் பெயர் பெற்ற மலிங்கா, ஒருநாள் போட்டிகளில் Bowled அடிப்படையில் மட்டும் 104 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒருநாள் போட்டிகளில் ‘Bowled ‘ முறை வெளியேற்றத்தின் மூலம் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியோர்:

வாசிம் அக்ரம் – 176
வக்கார் யூனிஸ் – 151
முத்தையா முரளிதரன் – 122
ஷாகித் அப்ரிடி – 104
லசித் மலிங்கா – 104

வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியில் ‘Bowled’ வெளியேற்றத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான விக்கெட்டுகள்:

வாசிம் அக்ரம் – 278
வக்கார் யூனிஸ் – 253
ஜேம்ஸ் ஆண்டர்சன் – 186
லசித் மலிங்கா – 171

இப்படி மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அசகாயசூரனாக ஆற்றலை வெளிப்படுத்தி நம்மை மகிழ்வித்த மாலிங்கவை கொண்டாடுவோமா நண்பர்களே, விளையாட்டு. கொம்  இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் அதிகமதிகம் பகிருங்கள்.