மாலிங்கவை நமக்கு நினைவுபடுத்திய அயர்லாந்து வீரர்…!
அயர்லாந்து அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான கர்டிஸ் கேம்பர் எனும் இளம் வீர்ர் டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் இதுவரை 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்திய வீரர்களாக இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் வீரர் லசித் மலிங்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரசித் கான் மட்டுமே வீழ்த்தியிருந்தனர்.
இந்நிலையில் 22 வயதான அயர்லாந்து அணியை சேர்ந்த கர்டிஸ் கேம்பர் நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி Double Hat trick பெற்று அசத்தியுள்ளார்.
அயர்லாந்து அணிக்காக டி20 உலக கோப்பை தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.