மாலிங்க தொடர்பாக சம்பக ராமநாயக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுக்கும் முக்கிய கோரிக்கை..!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலங்க அண்மையில் அனைத்து வகையான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மாலிங்கவின் ஓய்வு ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், இலங்கை கிரிக்கெட்டில் மாலிங்கவின் இடம் வெற்றிடமாகவே இருக்கப்போகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தவரும் , மாலிங்கவின் குருவுமான சம்பக ராமநாயக்க ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்.
குறிப்பாக மாலிங்கவை கௌரவப்படுத்தும் முகமாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் மாலிங்க அணிந்த 99 இலக்க சீருடைக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார்.
அதுவே இலங்கை கிரிக்கெட்டுக்கு மாலிங்க ஆற்றிய சேவைக்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அவருக்கு கொடுக்கும் பெரிய கௌரவமாக இருக்கும் எனவும் அவர் கருத்து ததெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது, அவருடைய 10 ம் இலக்க சீருடைக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் எனும் கருத்துகள் வலுப்பபெற்றிருந்தமையும் இங்கே நினைவுபடுத்ததக்கது.
அந்த 10ஆம் இலக்க சீருடையை இளம் வீீரர் ஷர்துல் தாகூர் அணிந்து விளையாடியபோது ஏகப்பட்ட சர்ச்சைகள் சிக்கல்களும் எழுந்திருந்ததையும் நினைவுபடுத்தலாம்.