மாலிங்க vs மதீச பத்திரண – ஒப்பீடு..!

பதிரணாவுக்கு பந்துவீச்சில் பின்கால் சரியாக ஊன்றப்படுவதில்லை. இதனால் நிலைத்தன்மை குறையும், இதனால பந்துவீச்சின் துல்லியமும் பாதிக்கப்படும்.

மலிங்கா பந்துவீசும் படத்தைப் பார்த்தால், அவர் பின்கால் வலிமையாக நன்றாக ஊன்றப்பட்டிருக்கும்.

அடுத்து இவர் மலிங்காவை விட சற்று கீழாக கையிலிருந்து பந்தை விடுவிக்கிறார். இது அதிகப்படியான ரவுண்ட் ஆர்ம் ஆக்சன். இதனால் அதிகப் பளு தோள்பட்டைக்கும் கைகளுக்கும் இறங்கும். இதனால் காயமடையவும் அதிக வாய்ப்புண்டு.

வயது குறைவு என்பதும், IPL போன்ற உலகின் பெரிய T20 தொடரில் பங்கேற்பதும், இலங்கையின் சாம்பியன் வீரர்களிடம் ஆலோசனைகள் பெற முடியும் என்பதும், இவரின் பந்துவீச்சை சரியாகக் கூர்மைப்படுத்தும் என்று நம்பலாம்!

Richards

You Tube Link ?