மாலையிட்டு வரவேற்கப்பட்ட பான்ட்…!

மாலையிட்டு வரவேற்கப்பட்ட பான்ட்…!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் காப்பாளர் ரிஷப் பான்ட் கொரோனா தொடரிலிருந்து மீண்டு இந்திய அணியினரோடு இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் 4 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கிடையில் இந்திய விக்கெட் காப்பாளர் பான்ட் கொரோனா தொற்றுக்கு இலக்காகி தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவற்றை நிறைவு செய்துகொண்ட பான்ட், இன்று இந்திய அணியினரோடு இணைகையில் அவருக்கு பயிற்சியாளர் சாஸ்த்ரி மாலை அணிவித்து வரவேற்றுள்ளார்.

புகைப்படங்கள்.