மாஸ்டர் மைன்ட் எனப்படும் மஹேல…!

Master Mind Mahela Jayawardena ??❤

1997 இல் சர்வதேச அறிமுகம் பெற்ற சிறுவன். அடிக்கல்லை நாட்டி வைத்தான் தன் சாதனைக்கு. துடுப்பாட்டமும் களத்தடுப்பும் இவனுக்கு கை வந்த கலை. மைதானத்தில் எப்பேதும் ஆக்ரோஷமாக காணப்படும் ஒரு வீரர்.

தலைசிறந்த அணித்தலைவர்.

மஹேல என்றால் நினைவுக்கு வருவது 2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இன்சைட் அவுட் ஷொட் மூலம் எக்ஸ்ட்ரா கவர் திசையில் பௌண்ட்ரி ஒன்றை பறக்க விட்டு தனது சதத்தை லாவகரமாக பெற்றுக்கொள்வார். வான்கடே அரங்கமே உற்சாகக் கரகோஷம் எழுப்பியிருக்கும். துடுப்பாட்டத்தில் இலங்கை அணிக்காக பாரியளவு தனது முழு ஆற்றலையும் வழங்கியிருப்பார்.மஹேல மாத்திரமே உலக கிண்ண போட்டிகளில் அரையிறுதிப் போட்டிகளிலும் இறுதி போட்டிகளிலும் சதம் விளாசிய ஒரேய் வீரராவார். டெஸ்ட் போட்டி ஒன்றில் தனி நபர் பெற்ற அதிக பட்ச ஓட்டமாக 374 ஓட்டங்களை பெற்று உலகில் 4 வது நபராகவும் சிறந்து விளங்கினார். சர்வதேச அரங்கில் 25000ற்கும் மேற்பட்ட ஓட்டங்களை இலங்கை அணிக்காக பெற்ற நட்ச்சத்திர துடுப்பாட்ட வீரராவார்.

இவரது துடுப்பாட்டம் அனைவரையும் மெச்சும் அளவுக்கு கண்ணுக்கு விருந்தாக இருக்கும். லேட் கட்டை சாதாரணமாக விளையாடும் அசாத்திய சாலி. லெக் க்ளான்ஸ், கவர் டிரைவ், இன்சைட் அவுட், ஸ்லொக் ஸ்வீப், அப்பர் கட் போன்ற தற்போது T20 களில் பிரபலமாக கையாளப்படும் ஷொட்களை தான் விளையாடிய காலங்களிலே நிரூபித்து காட்டியவர்.
இதனாலே Modern Cricket Era என்று கூறுவர்.

களத்தடுப்பில் ஈடுபடும் போது தன்னை எப்போதும் திடமாகவே வைத்திருப்பார். காரணம் அவர் களத்தடுப்பு செய்யும் பகுதி ஸ்லிப் திசையாகும். களத்தடுப்பில் மிகவும் கடினமான பணியாக இருப்பது ஸ்லிப் திசையில் களத்தடுப்பில் ஈடுபடுவது. அதற்கு நிதானம், கூர்மையான பார்வை, துடுப்பாட்ட வீரரின் துடுப்பாட்ட மட்டையை அவதானித்த படி நிற்க வேண்டும் . இதற்கெல்லாம் சிம்ம சொற் பனமாக திகழ்ந்தவர் மஹேல. சர்வதேச அரங்கில் அதிக பிடியெடுப்புகளை ஸ்லிப் திசையில் பிடித்தவர் என்ற சாதனை இன்னும் மஹேல கையிலே காணப்படுகிறது.

இலங்கை அணித்தலைவர்களில் அதிசிறந்த தலைவர்களில் மஹேலவிற்க்கே முதன்மை இடம். தலைமைத்துவத்தை இவ்வாறுதான் செய்ய வேண்டும் என்று இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டவர். தனது முடிவுகளை சரியான நேரத்தில் சரியாக உபயோகிப்பதில் கில்லாடி. கடைசி பந்து வரை தனது 100% பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற முனைப்போடு மைதானத்தில் வலம் வருவார்.

2015 கிரிக்கட்டுக்கு ஓய்வை அறிவித்து பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்தார். சிறிது காலம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக செயற்பட்டார். 2017 மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அழைக்கப்பட்டார். சச்சினால் கட்டியமைக்கப்பட்ட மும்பையை அசைக்க முடியாத சக்தியாக மாற்றியமைத்தார் மஹேல 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சம்பியன் ஆக இருப்பதற்கு திரைக்கு பின்னால் கம்பீரமாக இருந்தவர் மஹேல.

2017 ஐபிஎல் போட்டியில் இறுதி ஓவரில் ரோஹித் ஷர்மாவுக்கு சிறிய அறிவுரை வழங்கி ஜோன்சனை பந்து வீச பணித்திருப்பார். அந்த நாட்களில் இந்த செய்தியே வைரல். இதனாலயே இவரை அனைவரும் மாஸ்டர் மைன்ட் என்று அழைக்கிறோம்.

தொட்டதெல்லாம் தங்கம் என்று சொல்வது போல் மஹேல சென்ற இடமெல்லாம் சம்பியன் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த வருடம் இடம்பெற்ற The Hundred தொடரிலும் Southern Braves அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்ப்பட்டு கிண்ணமும் வாங்கி கொடுத்திருப்பார்.

இன்று மீண்டும் தனது தாய் நாட்டிற்கு அவரது சேவை தேவைப்பட்டிருக்கின்றது. வருகின்ற உலகக் கிண்ண போட்டிகளின் ஆலோசகராக நியமிக்கபட்ட மஹேல U19 அணியின் ஆலோசகராகவும் செயற்படுவார் என்று இலங்கை கிரிக்கட் வாரியம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இலங்கை ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே கொண்டு போய் விட்டது. காரணம் இவரை உலகமே சிறந்த பயிற்சியாளர் என்று கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் இவர் இலங்கை அணிக்காக பயிற்றுவிக்க மாட்டாரா என்று ஏங்கிய ஏராளமானோர் இருக்கின்றார்.

உண்மையிலே இளம் அணி ஒன்றிற்கு ஆலோசகராக நியமிக்கபட்டது ஆரோக்கியமான விடயமே. காரணம் இளம் துடுப்பாட்ட வீரர்களே எதிர் காலத்தில் அணி ஒன்றாக செயற்ப்படுவார்கள். அவர்களை தகுதிப்படுத்துவதால் சிறந்த அணி ஒன்றும் பல நட்சத்திரங்களும் தோன்றுவர். மஹேல போன்ற ஜாம்பவான்கள் பயிற்சி அளிப்பது கூடுதல் சிறப்பு.


மஹேலவின் கண்ணோட்டம் அணி ஒன்றில் படும் போது அதனை வெற்றிகரமாக மாற்றும் ஆற்றல் மஹேலவிடம் உள்ளது. திறமைகளுக்கே முன்னிருமை. பயிற்சியே வேதவாக்கு என்று செயற்ப்படும் ஒருவரிடம் அணி ஒன்று வளரும் போது சம்பியன் அணியாக வலம் வரும் என்பதில் ஐயமில்லை

தனது சேவையை முழுமையாக நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செய்ய வாழ்த்துக்கள் ❤???

#Mohamed Rihan