இளையோருக்கான தெற்காசிய கால்பந்தாட்ட போட்டிகளை- இலங்கை மகளிர் அணியின் போட்டி முடிவுகள்..!
இலங்கை இளையோர் மகளிர் கால்பந்து அணி தொடற்சியான 4 வது தோல்வியை இன்று சந்தித்தது.
பங்களாதேஷ் மண்ணில் இலங்கை 0 : 12 பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான தெற்காசிய கால்பந்து தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியிடம் 12:0 என படுதோல்வியடைந்தது.
பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான தெற்காசிய கால்பந்து தொடரில் நேபாளம் அணியிடம் கடந்த 15 ம் திகதி இடம்பெற்ற போட்டியில் 6-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை இளையோர் மகளிர் அணி மற்றுமொரு தோல்வியை சந்தித்துள்ளது.
தொடரின் முதல் போட்டியில் பூட்டான் அணியிடம் 5:0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி, தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் 5:0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியுற்றது .
22 ம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த கால்பந்தாட்ட தொடரில் இலங்கை மகளிர் அணி சார்பில் 4 தமிழ் வீராங்கனைகளும் இடப்பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மஹாஜனக் கல்லூரியின் சி.தர்மிகா, உ.யோகிதா, கிருஷாந்தினி, வாலண்டீனா ஆகிய 4 வீராங்கனைகளும், அந்த அணியின் முகாமையாளராக இதே கல்லூரியின் பொறுப்பாசிரியர் செல்வி பத்மநிதி செல்லையா செயல்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 11 ம் திகதி ஆரம்பமான போட்டிகள் எதிர்வரும் 22 ம் திகதிவரை இடம்பெறவுள்ளது.