மிக்கி ஆதர் இலங்கை அணியின் பயிற்சியாளராக நம்மை திருப்தி படுத்தினாரா _ஓர் ஆய்வு ..!

மிக்கி ஆதர் இலங்கை அணியின் பயிற்சியாளராக நம்மை திருப்தி படுத்தினாரா _ஓர் ஆய்வு ..!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆதர் நியமிக்கப்பட்டு சரியாக 19 மாதங்களில் நிறைவுக்கு வந்திருக்கின்றன

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக திகழ்ந்த அவரை வளைத்துப் போட்டு இலங்கை பயிற்சியாளர் ஆக்கியது ஸ்ரீலங்கா கிரிக்கெட்.

இலங்கையின் பயிற்சியாளர் ஆக்கியதற்கு பின்னர் கிட்டத்தட்ட 19 மாதங்கள் நிறைவுக்கு வந்த நிலையில் இலங்கை கிரிக்கெட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியாத நிலையே காணப்படுகிறது.

இது வரைக்கும் ஆதரின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி மொத்தமாக 36 சர்வதேச ஆட்டங்களில் ஆடிஇருக்கிறது.

டெஸ்ட் ,ஒருநாள் போட்டிகள், டுவென்டி டுவென்டி போட்டிகள் என்று 36 போட்டிகள் விளையாட பட்டிருக்கின்றன. இவற்றில் வெறுமனே 7 போட்டிகளில் மட்டுமேதான் இலங்கை வெற்றியை பெற்றிருக்கிறது.

 

வெற்றி சராசரி என்று பார்த்தால் 19 வீதமாக காணப்படுகிறது, தோல்வி சராசரி 60 வீதத்தை தாண்டியதாக இருக்கிறது என்பதும் நோக்கத்தக்கது.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் மிக.கி ஆதரின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி 12 ஒருநாள் போட்டிகளில் 4 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பெற்றுள்ளது.

ட்வென்டி ட்வென்டி போட்டிகளை பொறுத்தவரையில் வெற்றிகளையும் தோல்விகளையும் கண்டுள்ளது டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை 12 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியையும் 10 தோல்விகளையும் கண்டிருக்கிறது .

12 டெஸ்ட் போட்டிகளில் 2 வெற்றிகளும் ,5 தோல்விகளையும் இலங்கை சந்தித்துள்ளது.

ஆகவே அவருடைய வழிநடத்தல், பயிற்றுவிப்பு மூலமாக இலங்கை அணிக்கு பெருமளவில் முன்னேற்றம் கிடைக்கவில்லை எனும் குற்றச்சாட்டை ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் வெற்றிகரமாக திகழ்ந்த ஹத்துருசிங்கவை இதேபோன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக்கி ஏமாற்றம் அடைந்தது இலங்கை.

பாகிஸ்தானின் வெற்றிகரமான பயிற்சியாளராக திகழ்ந்த ஆதரை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் பயிற்சியாளராக்கியும் மாற்றமில்லை.

ஆக மொத்தத்தில் பயிற்சியாளர்களையோ, தலைமைத்துவத்தையும் மாற்றுவதில் இலங்கை கிரிக்கெட்டின் வெற்றிகள்  இல்லை என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.

மாற்றவேண்டியது தலைவரையோ பயிற்சியாளரையோவல்ல, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடவடிக்கைகள என ரசிகர்கள் கருத்துக்கள் பகிர ஆரம்பித்திருக்கிறார்கள்.