மிக்கி ஆதர் முகத்தில் சேற்றை வாரி அடித்த பானுக்க..!
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 க்கு 1 என்று இந்திய அணி தன் வசப்படுத்தியது, மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வெற்றி பெறுவதற்கு காரணமாக அவர்களுடைய துடுப்பாட்டம் பேசப்படுகிறது.
இந்த தொடரில் ஒரு நாள் அறிமுகம் மேற்கொண்ட பானுக ராஜபக்ச முதலாவது போட்டியில் 22 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார், இரண்டாவது போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை, ஆயினும் மூன்றாவது போட்டியில் அவிஷ்கவுடன் சத இணைப்பாட்டம் புரிந்ததோடு அற்புதமான அரை சதத்தையும் அடித்தார்.
ராஜபக்ச இலங்கை அணி தேரவாளர்களும், நிர்வாகமும் தன்னை புறக்கணிப்பதாக அண்மையில் விமர்சன கருத்தை வீசி எறிந்தார்.
இதற்கு இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆதர் கடுமையான வார்த்தைகளால் ராஜபக்ஷ தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
சேறும் சகதியுமான வீரர்களை தான் விரும்புவதில்லை என்ற கருத்து மிக்கி ஆதரிடமிருந்து வந்திருந்தது.
பானுக்க ராஜபக்சவின் உடற்தகுதி செயல்பாடுகள் திருப்தி இல்லை என்கின்ற விதமாக ஆதர் கருத்து தெரிவித்ததால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு அதிகமாக கடுமையான, தீவிரமான பயிற்சிகள் மேற்கொண்டு திரும்பிய ராஜபக்ச தான் யார் என்பதை தன்னுடைய துடுப்பாட்ட மூலமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
Sloppy Cricketer என்று குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்ச, இன்று இலங்கைக்கு நீண்ட காலத்துக்குப் பின்னர் வெற்றியை பெற்றுக்கொடுத்து மிக்கி ஆதர் முகத்தில் தன்னிடமிருந்து சேறையும், சகதியையும் ஆதர் முகத்தில் அடித்திருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பேச வைத்திருக்கிறார்.
கடுமையான போராட்டங்களும் முயற்சிகளும் வீண் போவதில்லை என்பதற்கு ராஜபக்சவும் ஓர் உதாரணம்.