மிட்செல் ஸ்ட்ராக் – பிறந்த நாள் சிறப்பு பகிர்வு

2014ஆம் ஆண்டு இந்தியா ,ஆஸ்திரலியாவுக்கு சென்று ஆடும்போது ஸ்டார்க் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார் சேன் வார்னே.

ஸ்டார்க்கிடம் Aggression இல்லை, மிகவும் Softஆக இருக்கிறார். மிட்சல் ஜான்சனிடம் இருக்கும் அக்ரசன் ஸ்டார்க்கிடமும் வர வேண்டும். அவருடைய Body language ஐ மாற்ற வேண்டும் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து, சும்மா இருந்தவரை சீண்டிவிட்டீங்கனு சொல்ற மாதிரி பண்ணிவிட்டார், வார்னே.

ஜடேஜாவை பிட்ஸ் அண்ட் பீசஸ் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியது போல், வார்னே ஸ்டார்க்கை பேச எதிர் அணிகளின் பேட்ஸ்மேன்களை ஓடவிட்டு, தன்மீது வைத்த குற்றச்சாட்டுக்கு தன்னுடைய பந்தாலேயே பதில் கொடுத்தார் ஸ்டார்க்.

2015ஆம் ஆண்டு ஸ்டார்க், கிரிக்கெட் வாழ்க்கையில், உச்சம்தொட்ட ஆண்டு.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறித்தனமாக பந்துவீசினார்.

One day Cricket – 41 wickets
Test Cricket – 46 wickets
T20 Leagues – 20 Wickets

விக்கெட் வேட்டையை சரமாரியாக நடத்தி, தன்மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு மிகப்பெரிய பதிலடியைக் கொடுத்தார்.

ஆஸ்திரேலியா அணி அவரை 2015க்குப் பிறகு பத்திரமாகப் பாதுகாக்க ஆரம்பித்தது, அதிகமாக T20 போட்டிகள் மற்றும் லீக்குகளை ஆடவிடவில்லை, அவரும் பெரியதாக அதில் ஆர்வம் காட்டவில்லை . ஸ்டார்க்கை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு பயன்படுத்தி அவருடைய ஒர்க்லோடைக் குறைத்து ரொம்ப திறமையாக அவரை மெயின்டெயின் செய்தார்கள் .

2015 உலகக்கோப்பையில் எப்படி ஒரு பெரிய பெர்ஃபார்மன்ஸை கொடுத்தாரோ, அதேமாதிரி மற்றுமொரு மிரட்டும் பெர்ஃபார்மன்ஸை, 2019 உலககோப்பையில் கொடுத்தார். இரண்டு உலககோப்பையிலும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் இவரே.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதுப் பந்தில் ராக்கேட் வேகத்தில் வீசி ஓப்பனர்களைக் காலி செய்ய, டெயில் எண்டர்களுக்கு யார்க்கர்கள், பவுன்சர்கள் வீசி காலி செய்வது இது தான் உன் வேலை என தெளிவான பிளான் போட்டுக் கொடுத்துவிட்டனர். அவரும் அந்த ரூட்டை, கெட்டியாகப் பிடித்துகொண்டு, அதில் இன்றுவரை பயணித்துவருகிறார்.

ஐசிசி நடத்தும் ஒருநாள் தொடரில் விக்கெட்டுகளை வாரிக் குவிக்கும் எமனாக உருவெடுத்துள்ளார்.

ஸ்டார்க் வீசிய 3 பந்துகள் காலத்துக்கும் கொண்டாடப்படும்.

1. 2015 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஒரே பந்தில் நியிசிலாந்தின் கொட்டத்தை அடக்கி, அவர்களை அடிபணிய வைத்தது.

2. 2017 ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ்க்கு வீசிய Clueless பந்து, அந்தப் பந்துக்கு என்னிடம் எந்தவித பதிலும் இல்லை என்று தான் அவுட் ஆகியபின் வின்ஸ் கூறினார்.

3. 2019 உலகக்கோப்பையில் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் ஸ்டோக்ஸை காலி செய்த பந்து.

ஒவ்வொரு முறையும் ஐபிஎல் ஆடுவாரா என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். ஒன்று காயம் சதி செய்கிறது, இல்லை அவர் என்னுடைய ஒர்க்லோட் அதிகமாக இருக்கிறது என்று விலகிக் கொள்ளுகிறார் (12 கோடிகள் கொடுக்க ரெடியா இருந்தாலும் கூட ) இந்தமுறையாவது ஆடுவாரா என்பதை பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த ஆண்டு நடைபெறும் ஆஷஸ் மற்றும் T20 உலகக்கோப்பையை கண்டிப்பாக குறிவைத்திருப்பார். மற்றுமொரு மேஜிக் நிகழ்த்தினால் ஆஸி கோப்பையை தங்கள் கைகளில் ஏந்தும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்டார்க்!!!!!

#அய்யப்பன்