மியூசியம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கும் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகரின் வைரல் புகைப்படம்..!

ஜூன் 12, 2019 அன்று, இஙலகிலாந்தின் டவுன்டனில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி மோதியது.

இந்த போட்டியை ஆஸ்திரேலியா வென்றிருந்தாலும், சிலர் தங்கள் தோல்விக்கு பாகிஸ்தானின் பீல்டிங்கையும் குற்றம் சாட்டினாலும், அந்த நிகழ்வே இப்போது பிரபலமான மீம்ஸை உருவாக்க காரணமானது என்பதை மறக்கமுடியாது.

குறித்த போட்டிக்கு பின்னர் இணையத்தில் மில்லியன் மற்றும் பில்லியன் முறை பகிரப்பட்ட பிரபலமான டெம்ப்ளேட்களில் ஒன்றாக பாகிஸ்தான் ரசிகர் ஒருவரது படம் மாறியது.

எல்லை கோட்டருகே பீல்டிங் செய்த ஆசிப் அலி எளிதான கேட்சை தவறவிட்டபிறகு பிரபலமான “ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்” கமராக்களில் பிடிபட்டார்.

கேட்ச் தரையில் சென்றவுடன் கேமரா திடீரென பின்னணியில் இருந்த ஒரு பாகிஸ்தான் ரசிகர் பக்கம் திரும்பியது,

அவர் தனது இடுப்பில் கைகளுடன் ஏமாற்றத்துடன் நின்றார், அவருடைய வெளிப்பாடுகள் அனைத்தையும் முகபாவனை எடுத்துக்கூறின.

அந்த சம்பவத்திலிருந்து சில நிமிடங்களில், சம்பந்தப்பட்ட நபரின் உருவம் வைரலானது.

அவரது பெயர் முஹம்மது சரிம் அக்தர், வைரலான அவரது படம் ஹாங்காங் அருங்காட்சியகத்தில்  இடம்பெற்றுள்ளது என்பது இன்னும் சிறப்பம்சமே.

அவர் ஹாங்காங் மீம் மியூசியத்தை உள்ளடக்கிய ஒரு சிறிய யூடியூப் கிளிப்பை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு இந்த விடயத்தை வெளிக்கொணர்ந்தார்..

மேலும், அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நினைவுப் படத்தை கூட சரிம் வெளியிட்டார். அதில் சரிம் தனது புகழ்பெற்ற போஸில் அவரது கைகளை இடுப்பில் வைத்து ஏமாற்றத்துடன் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“புகைப்படத்தில் ஏமாற்றமளிக்கும் கிரிக்கெட் ரசிகர் முஹம்மது சரிம் அக்தர் உள்ளார்” என்று அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட மீம் தட்டின் தலைப்பு காண்பிக்கின்றது..

ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகரின் ஏமாற்றமடைந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இப்போது மியூசியம் வரை அந்த புகைப்படம் சென்று இருக்கின்றமை வியப்புக்கும் ஆச்சரியத்துக்குரியது எனலாம்.

பாகிஸ்தானிய இந்த ரசிகர்கள் இப்போது உலகளவில் பிரபலமானதோடு மட்டுமல்லாமல் , அவர் படம் மியூசியம் வரை  சென்று இருக்கின்றமை வியப்புக்குரியது.