மீண்டும் அணிக்கு திரும்புகிறார் மொஹமட் ஆமீர் -புதிய திருப்பம் ..!

மீண்டும் அணிக்கு திரும்புகிறார் மொஹமட் ஆமீர் -புதிய திருப்பம் ..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஆமீர், மீண்டும் தேசிய அணிக்கு திரும்ப விரும்புவதாக கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுப்பதாக ஆமீர் அறிவித்திருந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  தலைமை பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும்  இருந்து மிஷ்பாவுடன் ஏற்பட்ட முறுகல் நிலையே இவருடைய திடீர் ஓய்வுக்கு காரணம் பேசப்பட்டது.

நேற்றைய நாளில் தலைமை பயிற்சியாளர் மிஷ்பா உல் ஹக்,  வேகப்பந்து பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கட்டுக்கு சேவையாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய் ஓய்வை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு திரும்புவதாக ஆமீர் வெளியிட்டுள்ள செய்தி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மகிழ்வை கொடுத்ததுள்ளது.