மீண்டும் அணிக்கு வருகிறார் மத்தியூஸ்- புதிய திருப்பம்..!

மீண்டும் அணிக்கு வருகிறார் மத்தியூஸ்- புதிய திருப்பம்..!

இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மத்தியூஸ் அடுத்து வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கான தேர்வுக்கு தான் தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு (SLC) அறிவித்துள்ளார்.

மத்தியூஸ் ஜூலை 2021 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டார், அதே சமயத்தில் அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவது பற்றி பரிசீலிப்பதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு தகவல் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், SLC யின் ஆதாரங்களின்படி, மத்தியூஸ் கிரிக்கெட் நிர்வாகத்திற்குத் தான் தேர்வுக்கு தயாரான நிலையில் உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார்.

ஏஞ்சலோ மத்தியூஸ் இலங்கையின் சிரேஷ்ட்ட பேட்ஸ்மேன், அவர் வரவிருக்கும் இருபது -20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராக இல்லை என்றாலும், அவர் இலங்கையின் அடுத்த டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று நம்புகிறார்.

நவம்பரில் நடைபெறவிருந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் தொடரில் இலங்கை விளையாட உள்ளது. ஏஞ்சலோ மத்தியூஸ் எதிர்வரும் லங்கா பிரீமியர் லீக் 2021 போட்டிகளிலும் விளையாடுவார்.

அக்டோபர் 27 ஆம் திகதி தொடங்கும் உள்ளூர் பருவ காலத்தில் அவர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப்பில் (சிசிசி) விளையாடவுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.