ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகள் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ஆரம்பிக்க இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது.
ஆறாவது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
14 போட்டிகளில் மட்டுமே விளையாடப்பட்டிருந்த நிலையில் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீதமான 20 போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மைதானத்தில் இடம்பெறப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது.
வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் திகதி போட்டிகள் ஆரம்பிக்கும் எனவும், வீரர்கள் மே மாதம் 25 ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில், பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் ஜூன் மாதம் 5ஆம் திகதி போட்டிகள் ஆரம்பிக்கும் என்று தெரியப்படுத்தப்படுகிறது.