மீண்டும் இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில் சந்திமால் மற்றும் நுவான் பிரதீப் -தென்னாப்பிரிக்க தொடரில் ..!

மீண்டும் இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில் சந்திமால் மற்றும் நுவான் பிரதீப் -தென்னாப்பிரிக்க தொடரில் ..!

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

3 ஒருநாள் போட்டிகள் 3 T20 போட்டிகள் கொண்டதாக இடம்பெறவுள்ள இந்த தொடருக்கு, ஏற்கனவே இலங்கையின் உத்தேச 30 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியிருந்தது.

30 பேர் கொண்ட பட்டியலில் சிரேஷ்ட வீரர்கள் என புறந்தள்ளப்பட்ட சந்திமால் மற்றும் நுவான் பிரதீப் ஆகிய வீரர்கள் 22 பேர் கொண்ட அணியில்  உள்ளடக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தாசுன் ஷானக தலைமையில் விளையாடவுள்ள இலங்கை அணியில் சந்திமால் ,பிரதீப் ஆகியோர் இணைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த 22 பேர் கொண்ட பெயர் விபரம் விளையாட்டுத் துறை அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அறிய கிடைக்கிறது.

எது எவ்வாறாயினும் இறுதியாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திக்காக நாங்கள் காத்திருப்போம்.

உறுதிப்படுத்தப்படாத தொடருக்கான சாத்தியமான அணி

தசுன் ஷானகா (கேப்டன்)

குசல் ஜனித் பெரேரா

அவிஷ்க பெர்னாண்டோ

பானுக ராஜபக்ஷ

தனஞ்சய டி சில்வா

பத்தும் நிசங்க

சரித் அசலங்க

கமிந்து மெண்டிஸ்

மினோட் பானுக

தினேஷ் சந்திமால்,

வனிந்து ஹசரங்க

சாமிகா கருணாரத்ன

லஹிரு மதுஷங்க,

துஷ்மந்த சமீர

பினுர பெர்னாண்டோ

நுவான் பிரதீப்

லஹிரு குமார

அகிலா தனஞ்செய

பிரவீன் ஜெயவிக்ரம

மகேஷ் தீக்ஷனா

புலின தரங்கா

ரமேஷ் மெண்டிஸ்.

அஷேன் பண்டார

*குசல் ஜனித் பெரேரா டி 20 தொடருக்கு மட்டுமே .

போட்டி அட்டவணை (ஆர். பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்து போட்டிகளும்)

முதல் ஒருநாள் போட்டி : செப்டம்பர் 2, வியாழக்கிழமை மாலை 3.00 மணி

2 வது ஒருநாள் போட்டி : சனிக்கிழமை, 4 செப்டம்பர் 4, மாலை 3.00 மணி

3 வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 7, செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணி

முதல் T20: வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, இரவு 8.00 மணி

2 வது T20: ஞாயிறு, செப்டம்பர் 12, இரவு 8.00 மணி

3 வது T20: செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 14, இரவு 8.00 மணி