மீண்டும் இலங்கை அணியுடன் வாஸ்…!

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட சமிந்த வாஸ் அண்மையில் சம்பள தகராறு காரணமாக திடீரென பதவி விலகினார் .

மேற்கிந்திய தீவுகள் சுற்றுலாவுக்கு முன்னதாக திடீரென அவரது பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ஆயினும் இப்போதைய நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தரப்பு சமிந்த வாசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீண்டும் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசத இணைப்பாட்டத்தில் இங்கிலாந்து சாதனை.
Next articleஹாட்லி கல்லூரியின் ஆதிக்கமும் நம்மவர்களின் வியக்க வைக்கும் திறமையும் : 70 களில் நடைபெற்ற பருத்தித்துறை சீனா கால்பந்து போட்டி