மீண்டும் ஒரு அதிரடி முடிவை அறிவித்தார் கோலி -கோலி ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..!

மீண்டும் ஒரு அதிரடி முடிவை அறிவித்தார் கோலி -கோலி ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருக்கின்ற விராட் கோலி அண்மையில் ஐசிசி ட்வெண்டி ட்வெண்டி உலகக்கிண்ண போட்டிகளின் பின்னர் இந்தியா T20 போட்டிகளுக்கான தமத்துவத்தில் இருந்து விலகுவதாக அதிர்ச்சிகரமான முடிவை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று விராட் கோலியிடம் இருந்து இன்னுமொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணியின் தலைமைத்துவதிலிருந்து இந்த பருவ காலத்துடன் விலகவுள்ளதாக விராட் கோலி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

8 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி ஆர்சிபி அணியின் தலைவராக இருந்தாலும், அவரால் அந்த அணிக்கும் கிண்ணம் எதனையும் வெற்றி கொள்ள முடியாத நிலைமை இருக்கிறது.

இந்த நிலையிலேயே விராட் கோலி இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது, ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கோலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.