மீண்டும் ஒரு தடவை திருமலை சல்லி அம்பாள் வித்தியாலய மாணவி தேசிய சாதனை..!

மீண்டும் ஒரு தடவை திருமலை சல்லி அம்பாள் வித்தியாலய மாணவி தேசிய சாதனை..!

பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட Sir John Tarbet Athletic Championship 2022 இல் 20 வயதின் கீழ் பெண்களுக்கான 3000m steeplechase போட்டியில் திருகோணமலை சல்லி அம்பாள் மகா வித்தியாலய  மாணவி அ. பிரதிசா மீண்டும் ஒரு முறை தேசிய பதக்கம் வென்றார்.

8 ஆம் திகதி ஜூன் மாதம் சுகததாச மைதானத்தில் இடம்பெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றவர் பிரதிசா என்பதும் குறிப்பிடத்தக்கது,

இந்தநிலையிலேயே கடந்த 13 ஆம் திகதி செப்டம்பர் மாதம் தியகம மைதானத்தில் Sir John Tarbet Athletic Championship 2022 ஆரம்பமாகிய நிகழ்வில், இன்று காலை 15 இடம் பெற்ற Steeplechase நிகழ்வில் இதில் பிரதிசா மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை பெற்று கொண்டார்.

அது மட்டுமல்லாது 20 வயதின் கீழ் பெண்களுக்கான 800m போட்டியில் இறுதி போட்டியில் ஆறாவதாகவும், 400m தடை தாண்டல் போட்டியில் அரையிறுதி போட்டியில் நான்காவது இடத்தை பெற்றுகொண்டதும் இங்கே குறிப்பிடதக்கது.

இந்த மாணவியை பயிற்றுவிக்கும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் சந்துரு வரதராசனுக்கும், மாணவிக்கும் நமது வாழ்த்துகள் ?