மீண்டும் கிரிக்கட் களத்துக்கு திரும்பும் டில்ஷால் – இனி எல்லாம் சுகமே ..!

காஷ்மீர் பிரீமியர் லீக்கின் 1 வது பதிப்பில் விளையாட இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷானை முசாபராபாத் டைகர்ஸ் அணி தேர்வு செய்துள்ளனர்.

டில்ஷானுடன், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் நட்சத்திரம் ஹெர்ஷல் கிப்ஸ் மற்றும் முன்னாள் இங்கிலாந்து அணியின் மான்டி பனேசர், மாட் பிரயர், ஓவைஸ் ஷா ஆகியோர் KPL 2021 இல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களாக விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால ஏற்பாடு செய்யப்பட்ட காஷ்மீர் பிரீமியர் லீக் 2021 ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கும், இறுதி போட்டி 2021 ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும்.

KPL முதல் சீசனில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்த 6 அணிகளும் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும், முதல் 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

டில்ஷானின் முசாபராபாத் அணியில் பாகிஸ்தான் நட்சத்திரங்கள் மொஹமட் ஹபீஸ், சோஹைல் தன்வீர், ஷோயிப் மக்ஸூத் மற்றும் மொஹமட் வாசிம் ஆகியோரும் உள்ளடக்கியுள்ளனர்.

டில்ஷான் டில் ஸ்கூப் பார்த்து நாம் கொண்டாடுவோமே ??

  • முழு அணி