மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு வரும் சனத் – எங்கே ,எப்போது தெரியுமா ?

மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு வரும் சனத் – எங்கே ,எப்போது தெரியுமா ?

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரர் சனத் ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்தை கண்டு ரசிக்கும் பாக்கியம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் கிட்டவுள்ளது.

இந்தியாவில் இடம்பெறவுள்ள வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு T20 தொடரில் டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் சனத் இணைந்துள்ளார்.

ரசல் ஆர்னோல்ட், நுவான் குலசேகர, தம்மிக்க பிரசாத் ஆகியோரோடு சனத்தும் இணையவுள்ளமை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

மார்ச் 2 முதல் மார்ச் 21 வரை இந்தப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.