மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் திஸர பெரேரா மற்றும் சந்திமால்..!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களாக திகழ்ந்த திசர பெரேரா மற்றும் சந்திமால் ஆகியோரை கிரிக்கெட் களத்தில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு மீண்டும் கிட்டியுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு ஆரம்பித்த வைக்கப்பட்டிருந்த Army Commanders premier league போட்டிகளில் இரண்டாவது அத்தியாயம் வருகின்ற 31ம் திகதி ஆரம்பிக்கவுள்ளஅது.
4 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 31ஆம் திகதி ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரைக்கும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
வடக்கு ,தெற்கு ,கிழக்கு ,மேற்கு என்று நான்கு அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கெடுக்கின்றன 4 அணிகளின் தலைவர்களாக திசர பெரேரா, சந்திமால் ,அசேல குணவர்தன , சீக்குகே பிரசன்ன ஆகியோர் இடம்பிடித்துள்ளனர் .
இந்த அணிகளில் தம்மிக்க பிரசாத், அஞ்சலோ பெரேரா, சத்துரங்க டீ சில்வா, நுவான் பிரதீப் , லக்மால் , சந்துன் வீரக்கொடி , தரங்க உள்ளிட்ட பல பிரபல வீரர்கள் விளையாடவுள்ளனர்.