மீண்டும் சதத்தை தவறவிட்ட வாஷிங்டன் சுந்தர் …!

மீண்டும் சதத்தை தவறவிட்ட வாஷிங்டன் சுந்தர் …!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் விரைவாகவே ஆட்டமிழந்த நிலையில், இளம் வீரர்களான பான்ட், வாஷிங்டன் சுந்தர்,பட்டேல் ஆகியோர் இந்திய அணியை கரை சேர்த்தனர் .

365 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்கு இவர்களது துடுப்பாட்டம் பங்களிப்பு நல்கியது .

ஆனால் இறுதி 3 விக்கெட்டுகளும் விரைவாகவே இழக்கப்பட்ட நிலையில் தமிழக வீரர் சுந்தர் சதத்தைப் பெறும் வாய்ப்பை நழுவவிட்டார் .

96 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காத நிலையில் அடுத்தடுத்து அக்ஷர் பட்டேல் மற்றும் இஷாந்த் சர்மா, சிராஐ் ஆகியோர் ஆட்டம் இழந்தனர் .

இதனைத் தொடர்ந்து மீம்ஸ் கிரியேட்டர்கள் பலரும் சுந்தரின் சதம் தொடர்பாக மீம்ஸ் பலவற்றை உருவாக்கி உள்ளனர்.