இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் சுவர் என்று அழைக்கப்பட்ட மூத்த பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா, ரஞ்சி டிராபியில் சதம் அடித்து மீண்டும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கடந்த 2023 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC Final 2023) இறுதிப் போட்டியில் விளையாடியதில் இருந்து புஜாரா இந்திய அணியில் விளையாடவில்லை. அதன்பிறகு புஜாரா டெஸ்ட் அணியில் மீண்டும் களமிறங்க முயற்சித்து வருகிறார், ஆனால் இப்போது வரை அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
புஜாரா 62வது சதம்
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்ய சவுராஷ்டிரா அணி களமிறங்கியது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சவுராஷ்டிரா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையாததால், 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதற்குப் பிறகு, புஜாரா நான்காவது இடத்தில் பேட்டிங் செய்யும் போது இன்னிங்ஸைப் பொறுப்பேற்றார், மேலும் ஷெல்டன் ஜாக்சனும் அவருக்கு ஆதரவளித்தார்.
ஒரு முனையில் இருந்து பேட்டிங் செய்த புஜாரா 199 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் 62வது சதத்தை அடித்தார். இதற்கு முன், புஜாரா இந்த சீசனில் ரஞ்சி டிராபியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன்களை குவித்து, டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க, தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் புஜாரா. ஆனால், 36 வயதாகும் புஜாராவுக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தியாவுக்காக புஜாரா இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7195 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அவர் பெயரில் 19 சர்வதேச டெஸ்ட் சதங்கள் உள்ளன.