மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நிறைவுக்கு வந்து 14வது ஐபிஎல் தொடரின் 12 ஆவது போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது .
ராஜஸ்தான் ராயல்ஸ் எதிரான போட்டியில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .
பந்துவீச்சில் இளம் வீரர் சகாரியா, தோனி ,ரெய்னா உள்ளடங்கலாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் .
189 என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அணித்தலைவர் சாம்சன் 1 ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தாலும் முதல் 11 ஓவர்களில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 81 ஓட்டங்களை குவித்தது.
ஜோஸ் பட்லர் 49 ஓட்டங்களை குவித்தார் ,ஆயினும் 11வது ஓவரின் பின்னர் போட்டி சென்னை பக்கம் திரும்பியது.
மொயீன் அலி இடைநடுவே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 4 பிடியெடுப்புகளையும் எடுத்து அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது .
இதன் மூலம் பெங்களூரு அணியை அடுத்து சென்னை அணி 2-வது இடத்தில் புள்ளி பட்டியலில் காணப்படுகிறது. பங்கெடுத்து மூன்று ஆட்டங்களில் சென்னை இரண்டில் வெற்றி கொண்டதன் மூலமாக தோனி தலைமையிலான சென்னை அணி மீண்டு வந்துள்ளதாக ரசிகர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.