மீண்டும் சொதப்பிய இந்திய மத்திய வரிசை- போராடும் இங்கிலாந்து ..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.

இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் 6 வது சதம் அடித்து லோர்ட்ஸ் மைதானத்தில் சாதனை படைத்தார். ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் சத இணைப்பாட்டம் புரிந்தனர்.

 

ரோகித் சர்மா 83 ஓட்டங்கள் , விராட் கோலி 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

நேற்றைய நாள் நிறைவில் லோகேஷ் ராகுல் 127* ,ரஹானே 1* ஓட்டம் பெற்று களத்தில் இருந்தனர். ஆயினும் இன்றைய 2 ம் நாளில் போட்டி ஆரம்பித்து 7 பந்துகள் இடைவெளியில் ராகுல் , ரஹானே ஆகியோர் ஆட்டமிழக்க இந்தியா 364 ஓட்டங்களில் அனைத்து விக்கட்களையும் இழந்தது்.முதல் நாள் நிறைவில்  3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இந்தியாவுக்கு மத்திய வரிசை ஏமாற்றம் கொடுத்தது.

 

பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து அணி இன்றைய 2 ம் நாள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

நாளை போட்டியின் 3 ம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது.