மீண்டும் டெஸ்ட் தர நிலையில் முதலிடத்தை எட்டியது இந்தியா ..!

மீண்டும் டெஸ்ட் தர நிலையில் முதலிடத்தை எட்டியது இந்தியா ..!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 எனும் அடிப்படையில் வெற்றி பெற்று அதன் மூலமாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தேர்வானது இந்திய அணி.

இது மாத்திரமல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது .

இதுவரை முதலிடத்தில் இருந்து நியூஸிலாந்து 118 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், இந்திய அணி 122 புள்ளிகள் பெற்று முதல் இடத்துக்கு மீண்டும் முன்னேறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.