மீண்டும் தகுதி சுற்றில் விளையாடும் நிலையில் இலங்கை, உலகக்கிண்ணத்தில் ஒரே குழுவில் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான், அட்டவணை வெளியீடு .!
சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ள ஐசிசி டுவென்டி20 உலக கிண்ண போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஆரம்பமாகும் இந்த போட்டிகள் அக்டோபர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
அவுஸ்ரேலியாவில் இடம்பெறும் இந்த போட்டிகளில் அணிகளின் விபரங்கள், குழுக்களின் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டது, இதன் அடிப்படையில் இந்திய, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் ஒரே குழுவில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய முன்னாள் உலக சாம்பியன்கள் தகுதி சுற்று ஆட்டங்கள் மூலமாகவே நேரடி சுற்றுக்கு தகுதி பெறும் நிலைமை உருவாகியுள்ளது .
முழுமையான அட்டவணை விவரம் உங்களுக்காக.