மீண்டும் பிறந்த வீட்டுக்கு சென்றுசேர்ந்தார் ரொனால்டோ..!

மீண்டும் பிறந்த வீட்டுக்கு சென்றுசேர்ந்தார் ரொனால்டோ..!

கடந்த ஒரு சில நாட்களாக மான்செஸ்டர் சிட்டி அணிக்கு Ronaldo செல்லவுள்ளதாக தகவல் கசிந்து வந்த நிலையில் இன்று ஒரு சில மணி நேரங்களில் Ronaldo மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.

12 வருடங்களின் பின்னர் மீண்டும் தனது சொந்த வீடான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பியுள்ளார் Ronaldo. Ronaldo இன் தந்தை என மரியாதை நிமித்தமாக அழைக்கப்படும் ஜாம்பவான் Sir Alex Ferguson இன் தலையீட்டால் Manchester United ஐ தேர்வு செய்துள்ளார் Ronaldo.

மான்செஸ்டர் யுனைடெட் கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒப்பந்தம் செய்வதாக அறிவித்தது.

⭕ 2 வருட ஒப்பந்தம்
⭕ 28 மில்லியன் யூரோக்கள்

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக  வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆரம்ப பருவ காலத்தில் 49 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

✅ 49 போட்டிகள்
⚽ 42 கோல்கள்
? 8 கோலுக்கான உதவி
? பிரீமியர் லீக் அதிக கோல் பெற்றவர்
? சாம்பியன்ஸ் லீக் அதிக கோல் அடித்தவர்

இப்படி பல சுவையான சாதனைகள் படைத்த ரொனால்டோ பழைய பன்னீர் செல்வமாக Rolando மீண்டும் மான்செஸ்டர் இல் இணைந்து அசத்தட்டும்.

#வைகரன்

 

Previous articleஎன்ன ஒரு பிடியெடுப்பு- லோகேஷ் ராகுலின் விக்கெட்டை பறித்தெடுத்த பெயர்ஸ்ரோ ( வீடியோ இணைப்பு)
Next articleஅண்டர்சன் உட்பட்ட இங்கிலாந்து வீரர்களை அலறவிட்ட இந்திய துடுப்பாட்ட வீரர்கள்..!