மீண்டும் வித்தையை காண்பித்து ஜார்வோ- ஓடிவந்து பெயர்ஸ்டோ மீது ஒரு குத்து, விமர்சனங்களை சந்திக்கும் இங்கிலாந்து காவல்துறை ..!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் மீண்டும் ஒரு வேடிக்கையான சம்பவம் பதிவானது.
இந்த தொடர் முழுவதுமாக அதிகம் பேசப்படும் ஒருவராக 69 ஆம் இலக்க சீருடையோடு ஆடுகளம் புகுந்து ரகளையில் ஈடுபடும் ஜர்வோ எனப்படும் ரசிகர் பேசப்படுகிறார் .
இன்றைய நாளில் மீண்டும் ஒரு தடவை ஜார்வோ மைதானத்துக்குள் புகுந்து பந்தை எறிந்து விட்டு, துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இங்கிலாந்தின் ஆட்டக்காரர் பெயர்ஸ்டோ மீது ஒரு குத்து விட்டார், அதன் பின்னர் அவரை மைதானத்துக்குள் விரைந்த பாதுகாவலர்கள் வெளியில் அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தொடரில் அவர் இரண்டு தடவைகள் இவ்வாறு மைதானத்திற்குள் புகுந்த ரகளையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனால் யோர்க்ஷைர் கிரிக்கெட் சபை, ஹெடிங்லே மைதானத்தில் போட்டிகளில் பார்வையிடுவதற்கு வாழ்நாள் தடை விதித்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் ஆட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில், ஒரு ரசிகர் இவ்வாறு பல தடவைகள் மைதானத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது எந்தளவு தூரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இங்கிலாந்தின் பாதுகாப்பு தரப்பு மீது பலத்த கேள்வி கணைகள் இதன் மூலமாக தொடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Big security threat too. Safety of the players is the biggest concern here.
— Sarang Bhalerao (@bhaleraosarang) September 3, 2021
Jarvo is back on the field of play. And this time he’s physically bumped into Olie Pope. I hope nobody is seeing humour in it anymore. Appalling that he’s allowed to attend every game in this series. #EngvInd
— Wear a Mask. Get Vaccinated, India (@cricketaakash) September 3, 2021
I think a few people need to be sacked at grounds in England. This is a very serious security lapse and it just continues. Not even a prank anymore. #Jarvo #Idiot.
— Harsha Bhogle (@bhogleharsha) September 3, 2021
Wonder whether #Jarvo running on to every ground is some PR/marketing gimmick?
— Cricketwallah (@cricketwallah) September 3, 2021
How can that rascal come in again? This is total rubbish from the organisers. Total nonsense. What security is there if at all? Shambolic. This jerk should be barred from all grounds. How could he even enter? This isn’t a joke.
— Boria Majumdar (@BoriaMajumdar) September 3, 2021
Security guards at English grounds: #Jarvo #EngvInd pic.twitter.com/0TE4S4vmS5
— Wasim Jaffer (@WasimJaffer14) September 3, 2021
Jarvo taking his revenge against Bairstow who asked him to get off the field last game ??….Jarvo the most successful pitch invader of all time #ENGvIND pic.twitter.com/fBoshoPjBW
— Prem Mohanty (@philipbkk) September 3, 2021
யார் இந்த குறும்புக்கார ஜார்வோ..!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்றிருக்கின்றது.
இந்த தொடரின் சுவாரஸ்யத்துக்கு மத்தியில், அதிகமாக போட்டி நடைபெறும் மைதானத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபடும் ஜார்வோ எனப்படும் ரசிகர் குறித்தே அதிகமானவர்கள் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
யார் இந்த குறும்புக்கார ஜர்வோ ?
ஜார்வோவைச் சுற்றி நிறைய ஆர்வம் ரசிகர்களுக்கு வந்துள்ளது, அவரது உண்மையான பெயர் டேனியல் ஜார்விஸ்.
ஜார்விஸ் ஒரு நகைச்சுவை நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் குறும்புக்காரர்.
அவரது ஆக்கிரமிப்பு படையெடுப்புகள் குறிப்பாக சமூக வலைதளங்களில் இந்தியாவில் புகழ் பெற்றுள்ளது மற்றும் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் அசுர அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல், டேனியல் ஜார்விஸ் தனது சொந்த யூடியூப் சேனலைப் பெருமைப்படுத்துகிறார், மேலும் 100,000 க்கும் மேற்பட்ட Subscribers கொண்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் ஆடுகளத்துள் புகுந்து ஆக்கிரமித்துள்ள அவரது வீடியோக்கள் அவரது சேனல் மூலம் வைரலாகி வருகிறது.
ஆக மொத்தத்தில் சமூக வலைத்தளங்களிலும், இந்திய ரசிகர்கள் மத்தியிலும் தன்னை பிரபலப்படுத்திக்கொண்டு தன் சமூக ஊடகங்களை அதிகமாக பிரபல படுத்துகின்ற முயற்சியாகவே ஜர்வோவின் அளவுக்கதிகமான அத்துமீறல்கள் அமைந்திருப்பதாகவும் அறிய வருகிறது.