மீண்டும் IPL தமக்கே என்பதை உறுதிப்படுத்தியது மும்பை இண்டியன்ஸ்- Play off போட்டியில் மீண்டும் மும்பை..!
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான போட்டித் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் இஷன் கிஷன் 25 பந்துகளில் அரைச்சதத்தை விளாச 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுக் கொண்டது.
இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் உயர்ந்ததோடு நிகர ஓட்ட சராசரியிலும் மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தாவிற்கு போட்டியாக வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் இன்றைய தோல்வியோடு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கான Play off வாய்ப்புகள் அரிதாகியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் Play off செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சென்னை, டெல்லி அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளைத் தொடர்ந்து இப்போது கொல்கத்தா , மும்பை அணிகள் 4 வது அணியாக தேர்வாகும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என அமைந்த இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தன் ரோயல்ஸ் அணி எதிர்பார்க்காத வண்ணமாக விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
90 ஓட்டங்களில் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, 20 ஓவர்களில் 90 ஓட்டங்கள் என்பது மிக மந்தமான ஒரு ட்வென்டி ட்வென்டி ஓட்டமாகவே பார்க்கப்பட்டது.
என்று மும்பை இந்தியன்ஸ் அணி ஜேம்ஸ் நீஷமை அணிக்குள் கொண்டு வந்திருந்தது, Nathan coulter-nile மற்றும் ஜேம்ஸ் நீசம் ஆகியோர் சிறப்பாக தமக்கிடையில் 8 விக்கெட்டுக்களை பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
91 எனும் இலகு இலக்குடன் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கஇஷன் கிஷன் 25 பந்துகளில் அரைசதத்தை அடிக்க ஒரு இலகுவான வெற்றியை பெற்றுக் கொண்டதோடு சேர்த்து அவர்களுடைய நெட் ரன்ரேட் டையும் மும்பை இந்தியன்ஸ் அதிகரித்து கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.