மீண்டும் IPL ல் பேசுபவருளான நம்ம தமிழக வீரர் சாய் சுதர்சன்..! (வீடியோ இணைப்பு)

GT vs MI போட்டியின் போது சாய் சுதர்சன் கீரன் பொல்லார்டின் ஹிட் விக்கெட்டில் அவுட் ஆனார்

15வது ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற தமிழகத்தின் இளம் வீரர் சாய் சுதர்சன் மிகப்பெருமளவில் ஐபிஎல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் .

கிடைத்துள்ள சில வாய்ப்புகளை மிகக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பது சிறப்பம்சம், கடந்த போட்டி ஒன்றின்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அனைத்து வீரர்களும் தடுமாற, தனித்து நின்று சாய் சுதர்சன் அரைசதம் அடித்தார்.

இதேபோன்று நேற்றைய  மும்பை இந்தியன்ஸ் ,குஜராத் அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் துடுப்பெடுத்தாடி கொண்டிருந்தபோது பொல்லார்ட்டின் பந்துவீச்சில் ஹிட் விக்கட் மூலம் சுதரசன் அவுட்டானார்,

பி சாய் சுதர்சன் ஐபிஎல் 2022ல் ஹிட் விக்கெட்டுக்கு ஆளான முதல் பேட்டர் ஆனார். குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸின் 16வது ஓவரின் கடைசி பந்தில் 177/6 என்ற ரன் துரத்தலின் போது இந்த ஆட்டமிழப்பிற்கு பலியாகினார்.

ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஆட்டமிழந்த 13வது வீரர் என்கின்ற பெயரையும் சுதர்சன் பெற்றுக்கொண்டார்.

வீடியோ இதோ?

 

இந்த ஐபிஎல் 2022ல் சாய் சுதர்ஷன்:-

35(30)
11(9).
20(14)
64*(50) -Punjab
14(11) – MI

போட்டி 51

மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுக்கு 177 (கிஷன் 45, டேவிட் 44*, ரோஹித் 43, ரஷித் 2-24)

குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுக்கு 172 (சாஹா 55, கில் 52, M அஷ்வின் 2-29) 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் போட்டியை வென்றது.