மீன்பிடித் தொழில் முதல் – IPL வரை ,தமிழகத்தின் இன்னுமொரு யாக்கர் புயல்…!

மீன்பிடித் தொழில் முதல் – IPL வரை ,தமிழகத்தின் இன்னுமொரு யாக்கர் புயல்…!

தமிழகத்தின் நடராஜனை போன்று மற்றொரு தமிழக வீரரையும் ஜொலிக்க வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளது சன் ரைசரஸ் ஐதராபாத் அணி.

இந்த முறை அந்த வாய்ப்பை பெற்றிருப்பவர் தமிழகத்தின் ஜி. பெரியசாமி எனும் இளம் வீரர் . இவரை வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒற்றைக் கண் பார்வை இன்றி , மீன்பிடித் தொழில் செய்து ,வாழ்வின் அனைத்து விதத்திலும் அடிபட்டுப்போன ஒருவன் வெற்றிபெற முடியும் என்பதற்கு இந்த பெரியசாமியும் மிகப்பெரிய உதாரணம்.

27 வயதாகும் கணேசன் பெரியசாமி, வலதுகை வேகப்பந்துவீச்சாளர் . இவரும் நடராஜனை போன்றே யார்க்கருக்கு புகழ்பெற்றவர் . இவரின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இவரின் பவுலிங் ஸ்டைல் இலங்கையின் மலிங்காவை போன்றே அச்சு அசலாக அப்படியே இருக்கும். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சேப்பாக் கில்லீஸ் அணிக்காக விளையாடி வந்த பெரியசாமி பல்வேறு ஆட்ட நாயகன் விருதுகளையும் பெற்றார். கடந்த 2019ம் ஆண்டு தொடர் நாயகன் விருதும் அவருக்கு சென்றது.

ஆனாலும் IPL அணிகள் ஏலத்தில் அவரை கண்டுகொள்ளாத நிலையில் இப்போது அருமையான வாய்ப்பு எட்டிப்பார்த்திருக்கிறது.

தமிழகத்திலிருந்து இன்னுமொரு யோக்கர் பயல் பட்டையை கிளப்பும் என காத்திருப்போம்.

பிறந்ததிலிருந்தே வலது கண்ணில் பார்வை குறைபாடு, கண்ணில் பார்வை இல்லாவிட்டாலும் களத்துக்கு திரும்புவதில் சோடை போகாத கணேசன் பெரியசாமி தன் குறைபாட்டை நிவர்த்தி செய்து, மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

7ஆம் ஆண்டு வரை கல்வி கற்றிருந்தாலும் ,குடும்ப வறுமை போன்ற சிக்கல்களில் சிக்கித் தவித்த கணேசன் பெரியசாமி, தமிழகத்தின்  நடராஜனை போன்றே சேலத்திலிருந்து IPLக்குள் நுழைகிறார்.

 

Previous articleநாய்களுடன் கால்பந்து களத்துக்கு விரைந்த வீர்ர்கள்- வித்தியாசமான போராட்டம் முன்னெடுப்பு..!
Next articleபாதுகாப்பு எச்சரிக்கையால் திடீரென கைவிடப்பட்ட பாகிஸ்தான்-நியூசிலாந்து தொடர்..!