அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுடனான இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
அதற்கான அவுஸ்திரேலியாவின் அணி விபரத்தை இன்று கிரிக்கட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
பட் கம்மின்ஸ் , க்ளென் மாக்ஸ்வெல் , டேவிட் வார்னர் , ஸ்டீவ் ஸ்மித் , மார்கஸ் ஸ்டோயினிஸ், ஜெய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு காரணங்களுக்காக சுற்றுப்பயணத்திற்கு தம்மை பரிசீலிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் தரப்பு கூறுகின்றது. குறித்த அனைத்து வீரர்களும் ஐபிஎல்லின் ஆஸ்திரேலிய அணியின் ஒரு பகுதியாக இருந்தனர், மாலைத்தீவில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் போக்குவரத்து மற்றும் 15 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பின்னரே மே 31 அன்று தாயகம் திரும்பினர்.
ஆகவே அதன்காரணத்தாலேயே தேசிய அணியில் விளையாட விரும்பவில்லை என்றும் அறிய வருகின்றது.
அறிவிக்கப்பட்டுள்ள அணியில் 19 வயதான இந்திய வம்சாவளியான தன்வீர் சங்கா எனும் இளம் வீரர் மேலதிக வீரராக அணியில் இடம்பெற்றுள்ளார்.