முடியை கட்டையாக வெட்டுங்கள், சமூக வலைத்தளங்களை தவிருங்கள், இல்லையேல் கிரிக்கெட்டுக்கு Good bye சொல்லிவிட்டு போய் விடுங்கள் …!

முடியை கட்டையாக வெட்டுங்கள், சமூக வலைத்தளங்களை தவிருங்கள், இல்லையேல் கிரிக்கெட்டுக்கு Good bye சொல்லிவிட்டு போய் விடுங்கள் …!

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமாக இளம் வீரர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றமைக்கு அவர்களுடைய உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு மிகப் பெரும் காரணமாக இருக்கிறது.

அந்த வகையில் இந்தியாவின் பிரபலமான பெங்கல் மாநிலத்தின் இருபத்து மூன்று வயதுக்குட்பட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் லக்ஷ்மி ரதன் சுக்லா ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

இந்திய தேசிய அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடியவரும் பெங்கல் மாநிலத்தின் முன்னாள் அணித் தலைவருமான சுக்லாவின் இந்த உத்தரவு எல்லோருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரிக்கெட்டை பொறுத்த வரையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியமானது ஆகையால் இந்து நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பது அவருடைய கருத்தாகும்.

ஒழுக்க சீலர்களாக முடியை கட்டையாக வெட்டுங்கள், சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடப்பதை தவிருங்கள், இவற்றை உங்களால் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் கிரிக்கெட்டுக்கு Good Bye சொல்லிவிட்டு போய் விடுங்கள் என்று லக்ஷ்மி ரத்தன் சுக்லா அதிரடியான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த லக்ஷ்மி ரத்தன் சுக்லா கடந்த ஜனவரி மாதம் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு இப்போது பெங்கல் மாநிலத்தின் 23 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

60 பேர் கொண்ட உத்தேச உடற் பயிற்சி முகாமின் போதே லக்ஷ்மி சுக்லா இந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.