முடிவுக்கு வந்தது விராட் கோலியின் கேப்டன்சி -சாதனைகள் புள்ளிவிபரம் ..!
RCB அணியினைடைய தலைவரான விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் RCB அணியின் தலைமைத்துவத்தில் இருந்து நேற்று நடைபெற்ற குவாலிபயர் போட்டியோடு விடைபெற்றார்.
2013ஆம் ஆண்டு டானியல் வெட்டோரியிடமிருந்து RCB அணியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட கோலி, நேற்று ஆர்சிபி அணிக்காக தலைவராக கடமையாற்றியது 140 வது IPL போட்டியாக அமைந்தது .
140 ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி 66 வெற்றிகளையும் , 70 தோல்விகளையும் ஆர்சிபி க்கு பெற்றுக்கொடுத்தார். ஆனால் ஒன்பது ஆண்டுகளில் கோலி கைகளில் ஐபிஎல் கிண்ணம் தவளவில்லை என்பதுதான் ரசிகர்களுக்கு இருக்கும் வேதனையாக இருக்கிறது .
அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அணித்தலைவர் என்ற சாதனையும் கோலி வசமுள்ளது, 4,881 ஓட்டங்கள் .ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் (5) , அதிக அரைச்சதங்கள் (40 அரைச்சதங்கள் ) ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக ஓட்டங்களை பெற்றுக் கொண்டவர்கள் என்பதையும் கூறி வருகிறது 973 ஓட்டங்களை 2016 ஆம் ஆண்டிலேயே பெற்றுக்கொண்ட வெற்றிகரமான துடுப்பாட்ட வீர்ரான கோலி தலைமைத்துவத்தில் சாதனை மகுடம் சூடாமலேயே விடைபெற்றுள்ளமை வேதனையானதுதான்.